MP profile
MP
32 11 5
Posts Followers Following
MP
Quote by MP - வயிற்றுக்குள் ஏதோ இனம் புரியாத ஒசை,
வாய்க்கு ருசியான பண்டங்களின் நினைப்பு வேறு வால் நட்சத்திரம் போல் தோன்றி மறைகிறது.
எதிரே ஒருவர் ஏதோ சாப்பிடுகிறார் வாசம் நாசியை தீண்டி போகிறது.
தேநீர் கடையில் பாட்டிலில் அடைக்கப்பட்ட பிஸ்கேட்டுகள் வயிற்றின் ஒசைக்கு ஸ்ருதி சேர்த்து கொண்டிருக்கிறது.
மது அருந்தாமலேயே தள்ளாடிக்கொண்டிருக்கிறேன்.
தண்ணீரேனும் கொடுங்கள் இன்றைக்கு இது போதும்.




                                (மணிப்பிரியா) - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
MP
Quote by MP - ஆணினத்திலேயே அவன் தனிரகம்!!!
மீசை முறுக்கி கர்வம் காட்டியதில்லை
அடியே என்று அதட்டி பேசியதில்லை
ஆசைவார்த்தை கூறி அசடு வழிந்ததில்லை
அவள் அங்க வளைவுகளை கவிதையாக்கி கவிபாடியதில்லை
அழுகை வந்தாலோ அழுது தீர்ப்பான்
மோக பார்வைக்கு வெட்கம் கொள்வான்
குழந்தை சிரிப்புக்கு சொந்தக்காரன்
ஆண் இப்படித்தான் என்ற வரையறைக்குள் அவன் பொருந்தியதே இல்லை!!!
ஆணினத்திலேயே அவன் தனிரகம்!!!





                                                   






                                                       (மணிப்பிரியா) - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
MP
Quote by MP - உள்ளம் கணத்து கண்ணீர் வழிந்தோடியபடி இருந்தது, சட்டென்று தூக்கத்தில் இருந்து விழித்து அருகில் வந்து தோள்களில் கை வைக்க வந்து சற்றே விலகி நின்று ஏன் அழுகிறாய் என்றான் அந்த விலகளை ரசித்தபடி ஏதுமில்லை என்றேன் 
அவன் ஒவ்வொரு அசைவும் அத்தனை அழகு. 






                                       




                                                       (மணிப்பிரியா) - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
MP
Quote by MP - மனிதன் முரண்பாடானவன்
















                                    (மணிப்பிரியா) - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
MP
Quote by MP - ''மேகம்''
அகிம்சையாய் ஒர் அணுகுண்டு!!

மணிப்பிரியா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
MP
Quote by MP - பேரின்பத்தை ஆரத்தழுவுகிறேன்,
கேட்பாரற்று கிடக்கும்
ஆன்மாவிற்கு அது ஆறுதல் அளித்து கொண்டிருக்கிறது.
Manipriya - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
MP
Quote by MP - அப்படி என்ன சிரிப்பு உனக்கு,
நான் ஆழ்ந்த கருத்தை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது
கூற வந்ததை மறந்தே போகிறேன்
அத்தனைக்கும் காரணம்
உன் மந்திரப்புன்னகை

மணிப்பிரியா - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
MP
Quote by MP - காயப்படுத்தி விடாதீர்கள் உங்கள் மீது அன்பு கொண்டவர்களை,
பாவம் அவர்களுக்கு உங்களை பழிக்க தெரியாது.

*_மணிப்பிரியா_* - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
MP
Quote by MP - கிடைத்தவைக்கு நன்றி கூறி பழகுங்கள்
கிடைக்க வேண்டியவை தானே வந்து சேரும்..... 

மணிப்பிரியா - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 1 comments
MP
Quote by MP - அந்த வாசகம்  சற்றே புன்முறுவல் பூக்கச் செய்தது

"இன்று முட்டாள்கள் தினம் அன்று முட்டாள்களால் உருவாக்கப்பட்ட தினம்"     _*மணிப்பிரியா*_ - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 1 comments

Explore more quotes

MP
Quote by MP - எவ்வித எதிர்பார்ப்புமின்றி 
ஒரு சிலரால் நேசிக்கப்படுவீர்கள்
அது உங்களைக் கடந்து செல்லும்
ஓரிரு வழிப்போக்கராக கூட இருக்கலாம்     -*மணிப்பிரியா*- - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
MP
Quote by MP - தொடுதலின் முடிவு காமமாகதான் இருக்க வேண்டுமா என்ன?
அது மகிழ்ச்சியாக இருக்கலாம், முரணாக இருக்கலாம், 
பரிவாக இருக்கலாம்,
பிரம்மிப்பாக இருக்கலாம், 
வலி உணர்தலாகவோ அல்லது பகிர்தலாகவோ கூட இருக்கலாம்,
இந்த மனிதர்கள் எப்போதும் தாம் நினைப்பது மட்டுமே நிகழ வேண்டும் என்கிறார்கள், பாவம் அவர்கள் ஏமார்ந்தே பழகியவர்கள் ஆயிற்றே.
                        
                  -(மணிப்பிரியா)- - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
MP
Quote by MP - அருகே வராதீர்கள் நான் என்னை செதுக்கிக்கொண்டு இருக்கிறேன் அதன் சில துளிகள் உங்கள் மீது வீசப்படலாம், கவலைக்கொள்ளாதீர்கள் அது அன்பானவர்களை ஒன்றும் செய்துவிடாது. 
                         -(மணிப்பிரியா)- - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
MP
Quote by MP - அவன்
இரு விழிகளின்
கண்ணீர் துளிகளாய்
என்றும் நான் MP - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
MP
Quote by MP - கண்மூடி
இருள் சூழ்ந்த வானத்தை
அன்னார்ந்து
வெறித்தபடி இருந்தேன்
பல நூறு முத்தங்கள்
அழுத்தமாக
கொடுக்கப்பட்டன
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி -
சற்றே கொட்டி தீர்த்தது மழை MP - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 2 comments
MP
Quote by MP - கண்மூடி
இருள் சூழ்ந்த வானத்தை
அன்னார்ந்து
வெறித்தபடி இருந்தேன்
பல நூறு முத்தங்கள்
அழுத்தமாக
கொடுக்கப்பட்டன
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி -
சற்றே கொட்டி தீர்த்தது மழை MP - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
MP
Quote by MP - இயற்கையாகவோ
அல்லது இயல்பாகவோ
நிகழ வேண்டியவை
உனக்கு நிகழவில்லை என்றால்
நீ அசாதாரணமானவன்/ள்
MP - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 3 comments
MP
Quote by MP - அன்பிற்கு உரியவனே
அகந்தையோடு திரிந்தவளை

அகழியினுள் போட்டு புதைத்து விட்டாய்

சொல்லொண்ணா துயரத்தில் 
சுற்றம் மறந்து 
வெதும்புகிறேன்

அந்த இறுதிப் பார்வையாவது 
பார்த்து விட்டுப் போ

இவள் அகம் குளிர்ந்து

பொய்யாக வேணும் முகம் மலரட்டும்.
MP - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 1 comments
MP
Quote by MP - நூலிழையில் தவறவிட்ட 
காதல்கள் பல, 
பல நூல்கள் உருவாக 
காரணமாகி போயின.
MP - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
MP
Quote by MP - பல கவிதைகள் அவன் அழகை வர்ணித்து எழுதப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன கவிஞர்கள் மாறினர் காலங்கள் மாறின ஆனால் அவன் அழகு முழுமையாய் எழுதப்பட்ட பாடில்லை நானும் அதில் விதி விளக்கல்ல அவன் அத்தனை அழகு!!!! 
 MP - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

MP
Quote by MP - என் இதயத்தை
மறந்து
அவனிடமே
வைத்துவிட்டேன்,
இருக்கட்டும்
அதுவாவது அவனோடு 
உறவாடட்டுமே.
MP - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
MP
Quote by MP - சிகை அலங்காரக்காரி
சிரிப்பை நிறுத்தவே மாட்டாள்.

MP - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
MP
Quote by MP - அவள் மேல்
விழுந்த
மழைத்துளிக்கு தெரியும்
அவள் தேக கதகதப்பு.

MP - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
MP
Quote by MP - ஆயிரம் மன்னர்கள் 
சிப்பாய்க்கு பணிபுரிந்தனர் 
கற்பனைபுரத்திலே

MP - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
MP
Quote by MP - கறுத்த வானம் உதிர்க்கும் 
வெண்ணிற முத்துக்கள் மழை.

MP - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 2 comments
MP
Quote by MP - என்றோ எழுதப்பட்ட 
கவிதை இவளின் அகராதி
தொலைக்கப்பட்டது.

MP - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 1 comments
MP
Quote by MP - விழுந்த இடத்திலேயே
எழுந்து நில்லுங்கள்
சாதாரணமாக அல்ல
சரித்திரமாக!!!

    MP - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 0 comments
MP
Quote by MP - இரக்கமற்றவன்
இரவிலும்
அவன்
நினைவுகளால்
இம்சித்து கொண்டே இருக்கிறான்....

MP - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
MP
Quote by MP - வெட்டத்தான் செய்வார்கள் துளிர்த்து கொண்டே இரு ஒரு நாள் சலித்து போவார்கள்.       

MP - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 5 comments
MP
Quote by MP - உன் இருப்பை உணர்த்திக்கொண்டே இரு 
இல்லையேல் தயவு தாட்சண்யம் இன்றி புதைக்கப்படுவாய்!!!!!!    MP - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

MANIPRIYA P
Quote by MANIPRIYA P - உரையை மாற்ற இருமுறை தட்டவும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
MANIPRIYA P
Quote by MANIPRIYA P - அவனதிகாரம்
அவளால்
எழுதப்பட்டது.

MP - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 4 comments